நாடளாவிய ரீதியில், கடந்த 12ஆம் திகதியன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைகள் யாவும், நேற்றுடன்(21) நிறைவடைந்துள்ள நிலையில், குழப்பங்களை விளைவிக்கும் வகையில் பரீட்சார்த்திகள் யாராவது ஈடுபட்டிருந்தால், அவ்வாறானவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்படுமென, பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முழுமையான விசாரணைகள் நடத்தப்படுமென்றும், பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.
#reeshma..