மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
07 அரச பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பீடாதிபதிகள் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, மாலபே மருத்துவ கல்லூரியை, அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக, ஓர் சபையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மருத்துவ கல்லூரியின் நிர்வாக செயற்பாடுகள் அரச விதிமுறைகளின்படி முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் அவதானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.