இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் அஜித் பி.பெரேரா வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்துவதாகவும் குறித்த ஒலிபரப்புகள் தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் அறியப்படுத்திய போதும் அதற்கு செவி சாய்க்கவில்லை என சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.