SLC T-20 போட்டிகளை காட்டிக் கொடுத்ததாக வீரர்கள் சிலருக்கு குற்றச்சாட்டு..!!

ஆகஸ்ட் 21ம் திகதி ஆரம்பமாகிய இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு -20 மாகாண லீக் கிரிக்கெட் போட்டிகளில் பிரதான வரிசை கிரிக்கெட் வீரர்கள் சிலர் பணத்திற்காக போட்டியினை விட்டுக்கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இது குறித்து விசேட விசாரணைகளுக்காக குறித்த வீரர்கள் இன்று(27) கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.