(FASTNEWS|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று(09) காலை 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.