SLPP தலைமையாக மஹிந்த வேட்பாளராக கோட்டா

(FASTGOSSIP | COLOMBO) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் அருந்திக பெர்ணான்டோ மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.