STF பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறித்த அறிக்கை நாளை பொலிஸ்மா அதிபரிடம் ..

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது விசேட அதிரடிப்படைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான அறிக்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆறு ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையின் பத்து அதிகாரிகளிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சாதக நிலைமை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களை எச்சரிக்கும் ஒலி நாடாவையும் பொலிஸ் விசாரணைக் குழுவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவினரும் விசாரணைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.