T-20 இற்கான துரும்பினை மாலிங்க வெளிப்படுத்தினார் – விளையாடும் இறுதி 11 வீரர்களும் இதோ..

நியூசிலாந்து அணியுடன் நாளை(11) இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டி நடைபெறவுள்ள ஈடன் மைதானமானது சிறிய பரப்பினைக் கொண்டதாகவும், பந்து வீச்சாளர்களுக்கு போட்டியினை மாற்றுவதற்கு அதிகளவான வாய்ப்பு இருப்பதாக தான் நம்புவதாக இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க இன்று(10) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும், தனது அனுபவங்களை உபயோகித்து யோகர் பந்து வீச்சில் நியூசிலாந்து அணிக்கு சவாலினை வழங்க உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இலங்கை அணி (எதிர்பார்க்கப்படும் வீரர்கள்)

1.நிரோஷன் திக்வெல்ல 2.குசல் ஜனித் பெரேரா 3.குசல் மென்டிஸ் 4. திசர பெரேரா 5. தசுன் ஷானக 6. தனஞ்சய டி சில்வா 7. அசேல குணரத்ன 8. சீக்குகே பிரசன்ன 9.லசித் மாலிங்க 10.லக்ஷான் சந்தகென் 11.கசுன் ராஜித

நியூசிலாந்து அணி (எதிர்பார்க்கப்படும் வீரர்கள்)

1 கொளின் முன்ரோ, 2 மார்டின் கப்டில், 3 கிளென் பிலிப்ஸ், 4 ரோஸ் டெய்லர், 5 ஹென்றி நிகொலஸ், 6 டிம் சர்வட் , 7 மிச்சேல் ஸ்டேனர், 8 டிம் சௌதி , 9 டொயுக் ப்ரக்வேல் , 10 இஷ் சோதி, 11லொகி பார்கியுசன்