T-20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி…

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 03 போட்டிகள் கொண்ட T-20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி 2:1 என கைபற்றியது.

குறித்த இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று(28) இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடி, 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

#rishma