T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த T-20 துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 826 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அரோன் பிஞ்ச் இரண்டாமிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஈவின் லீவீஸ் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் முதலிடத்திலும், இந்தியாவின் பும்ரா இரண்டாமிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தஹிர் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
சகல துறை ஆட்டக்காரர் பட்டியலில் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் கிளின் மேக்ஸ்வெல் இரண்டாமிடத்திலும், ஆப்கானிஸ்தானின் நபி மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
சிறந்த T-20 அணிகள் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்க இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இலங்கை அணி எட்டாவது இடத்தில் உள்ளது.