T-20 போட்டியில் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை மிரட்டி வரும் முஜிபுர் ரஹ்மான் Middlesex அணியுடன் இணைவு…

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ் (Middlesex) அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான 17 வயதுடைய முஜிபுர் ரஹ்மான், தனது மாயாஜால பந்து வீச்சால் இருபதுக்கு -20 போட்டியில் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை மிரட்டி வருகிறார்.

இதனால் ஐபிஎல் (IPL), பிக் பாஷ் (big bash) தொடரில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இருபதுக்கு – 20 பிளாஸ்ட் (T20 blast)தொடரில் விளையாட கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

16 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான முஜிபுர் ரஹ்மான் 54 விக்கெட்டுக்கள் வீழ்த்தியும், தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் போட்டிகளில் 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(iFA)