T20 உலகக்கிண்ண போட்டிக்கான காலஅட்டவணை

இந்த முறை இந்தியாவில் இடம்பெறவுள்ள T-20 உலக கிண்ண போட்டிகள் தொடர்பான உத்தியோகபூர்வ கால அட்டவணை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய நாளை முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் பல இடம்பெறுகின்றன.

இந்த வகையில், எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை அணி தமது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

அத்துடன் பாகிஸ்தானுடன் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை அணி  பயிற்சி போட்டி ஒன்றில் பங்குகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.