T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விபரம்

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி விபரம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பிரச்சினை எழுந்தது.

வீரர்களுக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்த ஊதியம் மற்றும் பரிசு தொகை போதாது என்று வீரர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தராவிட்டால் போட்டியை புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில் ஊதிய விவகாரத்தில் வீரர்களுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்திற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் வருமாறு,

டேரன் சமி (அணித் தலைவர்), சுலைமான் பென், ஜேசன் ஹோல்டர், ஆன்ட்ரே பிளெட்சர், டுவைன் பிராவோ, சாமுவேல் பத்ரீ, லென்ட் சிம்மொன்ஸ், ஜெரோம் டெய்லர், ஆன்ட்ரே ரஸல், மார்லான் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின், கிறிஸ் கெயில், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பிரத்வெயிட்