டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வாய்ப்பு குறித்து குமார் சங்கக்கார கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி குரூப் 1ல் விளையாடி வருகிறது. இலங்கை 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி அடைந்துள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள 5 அணிகளில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்நிலையில் இலங்கை அணியின் உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு பற்றி முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”இது கண்டிப்பாக இலங்கை அணிக்கு மிகவும் கடினமான தொடர். நமது பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
2 அணிகள் மட்டுமே அரையிறுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் கண்டிப்பாக அடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இது கடினமானதாக இருக்கப் போகிறது.
நாங்கள் நடப்பு சாம்பியன் என்று நினைத்து கொண்டு விளையாடும் போது நெருக்கடி ஏற்பட்டு சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம். அதனால் தங்களால் முடிந்த உழைப்பை அணிக்கு கொடுக்க வேண்டும்.
இலங்கை அணியில் சிறப்பான பந்துவீச்சு இருக்கிறது. அதே சமயம் துடுப்பாட்டத்தில் நல்ல ஓட்டங்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.