T20 சாதனை மற்றும் நிரோஷன் திக்வெல்ல குறித்து குசல் ஜனித் கருத்து…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிர்க்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெறுவதற்கு நெடுநாட்களுக்கு பின்னர் அணியில் சேர்ந்த குசல் ஜனித் பெரேரா பெரிதும் பங்காற்றியிருந்தார்.

குசல் நேற்றைய போட்டியில் 6 *4 ஓட்டங்கள் 9 இனைப் பெற்று 53 பந்துகளுக்கு 77 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை கைப்பற்றியிருந்தார்.

இது குறித்து குசல் ஜனித் பெரேரா ஆட்ட முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“நான் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியினை தழுவினேன், நான் அப்போட்டிகளுக்கு போதியளவு பயிற்சியினை பெறவில்லை என்றே கூற வேண்டும், சில சமயங்கள் போதிய பயிற்சி பெற்று களத்திற்கு வருவோரும் எதிர்பாரா விதத்தில் தோல்வியினை தழுவுகின்றனர், அது விளையாட்டில் பொதுவானதொன்று. நான் நிறைய போட்டிகளில் நிதானமாக விளையாடி எதிர்பாரா விதத்தில் விக்கெட்டினை இழக்கின்றேன், எந்தவொரு வீரரும் 20,30 ஓட்டங்களை பெரும் போது அதிகமாக ஓட்டங்களை எடுக்க வேண்டும் என கருதுகின்றனர். ஆனால் நான் மெதுவான பந்துகளை பலமாக அடிப்பதை விட்டும் தவிர்க்கின்றேன். ஏனெனில் பலமாக அடிக்கப்போய் விக்கெட்டினை இழந்த சந்தர்ப்பங்கள் நிறையவே,”

அவ்வாறே, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபாதைக்கு உட்பட்டுள்ள நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் ஜனித் பெரேராவுக்கும் இடையில் கடும் போட்டிகள் நிலவி வருகின்றதாக பரவி வரும் பிரச்சாரங்களுக்கும் இதன்போது குசல் பதிலளித்திருந்தார்.

“நான் விளையாடும் போது எனது நிலை என்னென்று நினைப்பதில்லை,எந்தவொரு வீரரும் எந்நேரத்திலும் விக்கெட்டினை இழக்கலாம்,அது போட்டியின் ஒரு பாதி, போட்டியில் திடசங்கத்துடன் சாதகமாக யோசிக்க வேண்டும், அது தனக்கு மற்றுமின்றி அணிக்கும் பேருதவியாக இருக்கும்”

(rizmira)