T20 தலைமைப் பதவியிலிருந்து மாலிங்க விலகல்

இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை கிரிக்கட் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயம் காரணமாக ஆசிய கிண்ண போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் லசித் மாலிங்க விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.