TEA குடித்தால் தான் புத்துணர்ச்சி வரும் என்று சொல்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விடயம்…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உணவில்லாமல் கூட இருந்துவிடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று சொல்லி ஒரு நாளை ஐந்து டீ பத்து டீ என்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் டீ ஆரோக்கியமானது தான். அதில் எந்த கெமிக்கல்களும் சேர்க்காத பட்சத்தில் அதுவும் அளவுடன் எடுத்துக் கொண்டால் மட்டுமே நன்மை தரக்கூடியாதாகும். அதை விடுத்து ஒரு நாளைக்கு இரண்டு டீக்கு மேல் குடித்தால் அது உங்களது உடல் நலனை வெகுவாக பாதிக்கும்.

புத்துணர்ச்சி:
புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு இரசாயனம் உள்ளது. இந்த இரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம். இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கவனச்சிதறல்:
ஒரு நாளில் அதிகப்படியான டீ குடித்து வந்தால் உங்களுக்கு தொடர்ந்து ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் உண்டாகலாம். மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பீர்கள்.

எலும்பு:
இது மிகவும் ஆபத்தான நோய். டீ தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் இந்த நோய் ஏற்படக்கூடும். டீயில் அதிகப்படியான ஃப்லூரைட் இருக்கிறது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் ஃப்ளூரைட் டாக்ஸிட்டி ஏற்படக்கூடும். இதனால் எலும்புகளில் வலி,எலும்புகள் தேய்மானம் ஆகியவை ஏற்படக்கூடும்.

கிட்னி:
இது கொஞ்சம் அரிய வகையானது தான். ஐஸ் டீ அதிகமாக குடித்து வந்தால் இப்பிரச்சனை ஏற்படக்கூடும். கிட்னியில் கற்கள் வருவது, கிட்னி செயலிழந்து போவது ஆகியவை உண்டாகும். ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக 10 டீ 15 டீ என்று குடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை உண்டாகிறது.

மலச்சிக்கல்:
காலை எழுந்ததும் சூடாக டீ குடிப்பது என்பது எல்லாருடைய வழக்கமாக இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் தொடர்ந்து டீ குடிப்பதினால் அது சரியாக உணவை செரிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்திடும். டீயில் இருக்கும் தியோஃபைலின் என்ற கெமிக்கல் அதிகமாக உடலில் சேரும் போது அது நம் உடலில் உள்ள தண்ணீர் சத்தை எல்லாம் உறிந்துவிடும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது.

கர்பிணிப்பெண்கள்:
அளவில்லாமல் அடிக்கடி தொடர்ந்து டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் கர்ப்பிணிப்பெண்கள் அதனை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. இந்த கேஃபைன் கருவை சிதைக்கும் தன்மை கொண்டது.

தூக்கமின்மை:
டீயில் இருக்கும் கேஃபைன் அதிகப்படியாக உடலில் சேர்ந்தால் அது டியூரிட்டிக் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்திடும். இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இரவில் தூக்கத்தின் போது அடிக்கடி சிறுநீர்கழிக்கச் செல்வதால் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. தூங்கும் நேரம்,எழும் நேரம் என எல்லாமே பாதிக்கப்படும்.