TNA மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(17) சந்திப்பு..

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(17) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

இதன்போது வடக்கு – கிழக்கில் பகுதிகளின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்திருந்தார்.