TNL தொலைக்காட்சி அலைவரிசை இடைநிறுத்தம்….

TNL தொலைக்காட்சி ஊடகத்தின் பொல்கஹவெல மீள் ஒளிபரப்பு மையத்தின் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குறித்த ஒளிபரப்பு நிலையத்தில் உள்ள உபகரணங்கள் பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மையத்தின் இடைநிறுத்தத்தினை தொடர்ந்து சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகளிலும் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக TNL தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிக்கையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தினால் நேற்று(04) அனுமதி இல்லாமல், மின் கோபுரங்கள் பராமரிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார்.