(FASTGOSSIP | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி சார்பிலான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில், கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பான ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து, முக்கியத் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், இந்தத் தீர்மானம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 99 சதவீதமானவர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் இந்நிலையில், அவரைக் களமிறக்குவதே, சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.