அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளோரிடா மாநிலத்திலுள்ள சர்வதேச வானூர்தி தளமொன்றில் நேற்று மாலை இந்தத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 5 பேர் பலியாகியதோடு, 8 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்டீபன் சந்தியாகோ என்ற 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.