இங்கிலாந்தில் நாடாளுமன்றம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் உள்ள பாலத்தில் நேற்று(22) மர்ம நபர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 12-க்கும் மேற்பட்டோ காயமடைந்தனர். 5 பேர் இறந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு கருதி நாடாளுமன்ற பணிகள் நிறுத்தப்பட்டு, நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.
பிரதமர் தெரசா மே பாதுகாப்புடன் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான பொலிசார் நாடாளுமன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை தொடர்ந்தும் காணப்படுகிறதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலினை உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளது.