கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும், கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதையானது கொஸ்கமயிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளை வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.