மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்து பறந்து கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளான ஈஜிப்ட் எயார் MS 804 விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், விமானத்தில் இருந்த புகை கண்டறியும் கருவி ஒன்று செயல்பட்டிருப்பதாக எகிப்திய அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அதேவேளை ஈஜிப்ட் எயார் MS 804 விமானம், தானியங்கி எச்சரிக்கைகளை வெளியிட்டதாக ஏவியேஷன் ஹெரால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, சில மணித்துளிகளில், விமான ஓட்டியின் அறையில் இருக்கும் ஜன்னல்கள் திறக்கப்பட்டதாகவும், விமான கழிவறை மற்றும் விமானத்தின் கீழ் தளத்தில் புகை ஏற்பட்டதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக விமானத்தை இயக்கும் கணினிகளில் கோளாறு இருந்ததாகவும் ஏவியேஷன் ஹெரால்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தகவல்களுக்கு அமைய, விமானம் கடத்தப்படவோ அல்லது விமானியின் அறையில் கோளாறுகள் ஏற்படவோ இல்லை என தெரிவித்துள்ளன ஏவியேஷன் ஹெரால்ட், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளதனால் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வெடிகுண்டால் கூட இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

தொடரும் மீட்பு நடவடிக்கைகள்

அவசர காலத்தில் கடலில் மிதக்க உதவும் ஜாக்கெட்

MS 804 விமானத்தின் இருக்கை சிதிலங்கள்