விருந்துபசார நிகழ்வொன்றின் போது பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவத்தின் போது, ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை அறிக்கை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில், பொலிஸ் ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையிலேயே, அந்த அறிக்கை, பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
‘அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸ் மா அதிபரினால் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த மரணம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது’ என மேற்படி பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.