ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லேன்ட் பகுதியில் பிரதான வீதியில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் பல மணி நேரம் அவ்வீதியினுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
செனன் வுட்லேன்ட் பகுதியில் இன்று(11) அதிகாலை 1 மணியளவில் குறித்த இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வெலிமடையிலிருந்து கொழும்பிற்கு 26,730Kg தேயிலை தூளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்ததோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகள் ஆகிய சிறிய ரக வாகனங்களே இவ்வீதியில் பயணிக்க முடிந்தது. ஏனைய கனரக வாகனங்கள் மாற்று வழியின் ஊடாக ஹட்டன் மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டது.
விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், லொறியை வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.