நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையில், அடிக்குறிப்பில் கைச்சாத்திட்ட உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு,
தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன, லசந்த அழகியவன்ன, அநுரகுமார திசாநாயக்க, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, பிமல் ரத்நாயக்க, வீரகுமார திசாநாயக்க, எஸ்.சிறிதரன், நளிந்த ஜயதிஸ்ஸ, எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா.
கோப் குழுவின் இறுதி அறிக்கையில், அடிக்குறிப்புடன் கைச்சாத்திட்ட உறுப்பினர்களின் விவரம்,
ரவீந்திர சமரவீர, சுஜீவ சேனசிங்க, வசந்த அலுவிஹார, ஹர்ஷ டீ சில்வார, அஜித் பி.பேரேரா, அசோக அபேசிங்க, அப்துல் மஹ்ரூப், ஹெக்டர் அப்புஹாமி, ஹர்ஷன ராஜகருணா.
கோப் குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..
மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் இறுதி அறிக்கை, தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
55 பக்கங்கங்களைளைக் கொண்ட இந்த இறுதி அறிக்கையுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இவ்விரு அறிக்கைகளுக்கும், கோப் குழுவிலுள்ள 16பேர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 9பேர், இணை அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இவ்விரு அறிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.