UPDATE – டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் பரவிய தீ வழமைக்கு..

(FASTNEWS| COLOMBO)- திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் பரவிய தீ தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(02) மதியம் 1.30 மணி வேளையில் குறித்த தீ பரவியதன் காரணமாக குறித்த பகுதியில் 10 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாராவது இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் சந்தேகப்படுகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களின் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.