Update – நாமல் ராஜபக்ஷவின் முன்னைய நாள் செயலாளர் கைது…

கொவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் இரேஷா டி சில்வா, இன்று(10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னைய நாள் செயலாளரான படபொல ஆராச்சிகே ஓரநெல்லா இரேசா சில்வா எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

30 மில்லியன் ரூபாவை சட்ட முரணாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான கவர்ஸ் கூட்டுறவு சேவைகள் நிறுவனத்தின் ஊடாக பரிமாற்றியமைக்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(09) அவருக்கு இன்டர்போல் ஊடாக பிடியாணை பிறப்பித்தது.

குறித்த இந்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகாமல், நாட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டிய நிலையிலேயே குறித்த இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் டுபாயில் இருந்து இன்று(10) அதிகாலை விமானம் மூலம் நாடு திரும்பிய வேளையில் அவர் விமான நிலையத்தில் வைத்து கைதானதாக குடிவரவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)