UPDATE – மண் மேட்டினுள் சிக்கியுள்ள நபரை தேடும் பனி தொடர்ந்தும்…

மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கல் குவாரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

அத்துடன், மற்றுமொருவர் மண் மேட்டினுள் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

அவரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஊழியரைக் கப்பாற்றும் முயற்சிகளுக்கு சில குழுக்களின் உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாக, களு கங்கை வேலைத் திட்டத்தின் மேலதிக பணிப்பாளர் டீ.பி.விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.