களுத்துறை மாவட்டத்தின் மதுகம , பாணந்துறை , ஹொரணை , உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் மற்றும் அம்பலங்கொடை நகரின் பல பிரதேசங்களுக்கும் இன்று மாலை 6.30 மணி தொடக்கம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
பன்னிபிடியவில் இருந்து மதுகம வரையான மின்சார இணைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
எனினும் மின்சாரத்தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.