நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ. 17 ரக விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று இன்று(29) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தேகம இனிமங்கட பிரதேசத்திலேயே குறித்த இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் உறுதிப்படுத்தியிருந்தார்.