Washing machine இல் துணி துவைக்கிறீர்களா?

வாஷின் மெஷின் உங்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றி விட்டது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை; ஆனால் அது உங்களின் விலையுர்ந்த ஆடைகளை பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் உங்களின் விலையுர்ந்த துணிகளை பாதுக்காக்க வேண்டுமெனில் நீங்கள் உங்களின் துணி உலர்த்தியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எனவே, துணிகள் சுருங்குவது அல்லது பாழாவது போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டு, நீங்கள் துணி உலர்த்தியைப் பயன்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகள் உள்ளன. அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குளிக்கும் துணிகள் :
குளிக்கும் துணிகள் பொதுவாக சூரியக் குளியலுக்காக வெப்பமான சூழ்நிலையில் அணியப்படுகிறது. இத்தகைய துணிகளை ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தில் சலவை செய்யும் பொழுது, அவற்றின் தரம் மாறி விடும்.
இது தவிர அத்தகைய துணிகளின் நிறத்தை இழந்து விடும். மேழும் அவைகள் மோசமான வடிவத்திற்கு மாறி விடுவதால் அவைகளை அதன் பிறகு பயன்படுத்த இயலாது.

ஜீன்ஸ் :
ஜீன்ஸை, துணி உலர்த்தும் இயந்திரத்தில் சலவை செய்யும் பொழுது, டெனிம் முற்றிலும் அழிந்து விடுகின்றது.
பெரும்பாலான டெனிம் துணிகளை, இயந்திரத்தில் துவைக்கும் பொழுது அவைகளின் நெகிழும் தன்மை மறைந்து போகின்றன. அதோடு அவைகளின் பளபளப்பும் அழியத்தொடங்குகின்றன.

எனவே டெனிம் துணிகளை துணி உலர்த்தும் இயந்திரத்தில் துவைக்காமல் கைகளால் துவைப்பது மிகவும் நல்லது.

நீங்கள் ஒரு தேக்கரண்டி உப்பை தண்ணீரில் கலந்து அதில் உங்களின் டெனிமை ஊற வைத்து அதன் பின்னர் துவைக்க வேண்டும்

சாக்ஸ் :
சாக்ஸ்களை ஒரு முறை இயந்திரத்தில் துவைத்த பிறகு அது பயனற்றதாகி விடுகின்றது. ஏனெனில் சாக்ஸ் அதன் நெகிழும் தன்மையை இழந்து விடுகின்றது.
ஆகவே சாக்ஸை ஒரு பொழுதும் இயந்திரத்தில் துவைக்காதீர்கள்.

அழகுபடுத்தப்பட்ட ஆடைகள்:
நாம் ஒவ்வொருவரும் எம்ப்ராயடரி மற்றும் கற்கள் வைத்து அழகுபடுத்தப்பட்ட ஆடைகளை மிகவும் விரும்புகின்றோம்.
ஆனால், அவைகளை இயந்திரத்தில் உலர்த்தி நாம் மிகப் பெரிய தவறை புரிகின்றோம். எனவே இத்தகைய துணிகளை கைகளால் துவைத்து தரையில் உலர்த்த வேண்டும்.

ரன்னிங் ஷூ:
ரன்னிங் ஷூக்களை சலவை செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வதால் அதன் குஷனிங் அழியக் கூடும் மற்றும் துணி வலுவிழந்து விடும்.
இது தவிர, ஒரு சலவை இயந்திரத்தில் உருவாகும் வெப்பம் ஷுக்களில் உள்ள ரப்பரை சுருக்கி காலணிகளை அழித்து விடும்.
எனவே, நீங்கள் துணி உலர்த்தும் இயந்திரத்தை அடுத்தமுறை பயன்படுத்தும் பொழுது நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்