WBBL 2020: அட்டவணை வெளியாகியது

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – 2020 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிக் பேஷ் (Women Big Bash) இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மகளிருக்கான Big Bash இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெறும் வகையில் இந்த அட்டவணையை அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.