whatsapp புதிய சேவையாக payment feature வசதியினை அறிமுகப்படுத்தியது…

வாட்ஸ் அப், நிறுவனமானது பயனாளர்களை கவரும் நோக்கில், பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்திவரும் நிலையில், தற்பொழுது பணபரிமாற்றம் முறை ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் குறித்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை மிகவும் எளிய முறையில், மற்றொருவருக்கு அனுப்பும் வகையில், “whatsapp payment feature” சேவை உதவும் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூபெர்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதற்கான Application ஐ அறிமுகப்படுத்துவதை எதிர்நோக்கியிருப்பதாகவும், மக்களுக்கு எளிதான சேவையை வழங்குவதே, அதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில மாதங்களில் இலங்கையிலும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.