அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் உள்ள YouTube தலைமை அலுவலகத்தில் நேற்று(03) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் மூவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, குறித்த பகுதியைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.