ஐலீன் புயல் பிரித்தானியாவினை நோக்கி ஊடுருவுகிறது..

ஐலீன் புயல் பிரித்தானியாவினை நோக்கி ஊடுருவுகிறது..

நிலவும் அசாதாரண காலநிலையில் அதிகளவு தாக்குதலை நடத்தும் முதல் புயலாக பெயரிடப்பட்டுள்ள ஐலீன், பிரித்தானியாவின் சில பகுதிகளை தாக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

12,13ம் தினங்களில் மணிக்கு 75மைல் வேகத்தில் இங்கிலாந்தையும் , வேல்ஸையும் இந்தப் புயல் தாக்குமென எதிர்பார்க்கிறார்கள் . வேல்ஸின் வட பிராந்தியம் , வட இங்கிலாந்தின் சில பிரதேசங்கள் . மிட்லண்டின் ஒரு பகுதி , மற்றும் நோர்போக் ஆகிய இடங்கள் தாக்கப்படலாம் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

பெய்யும் மழை பிரித்தானியாவின் வடபிராந்தியத்தில் இடையூறை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது .

இங்குள்ள தாழ் அமுக்கமே இந்தப் புயலைக் கொண்டு வருவதாகவும் , அது வேகமாக மேற்கிலிருந்து பிரித்தானியா ஊடாக கிழக்கு நோக்கி நகர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)