சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை..!

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது எனவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்க முயன்றதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், இது குறித்து கவனம் செலுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், இது தொடர்பில் முறையான விசாரணையை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.