கீதாவின் மேன்முறையீட்டு மனு – நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு…

கீதாவின் மேன்முறையீட்டு மனு – நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு…

தமது நாடாளுமன்ற உறுப்புரிமை சட்ட ரீதியானது அல்ல என மேன்முறையீட்டு நீதமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பின் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதியரசர் குழு முன்னிலையில் இன்று(25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.

குறித்த இந்த தீரப்பை சவாலுக்கு உட்படுத்தி கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார்.

இதையடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்படுவது தொடர்பான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)