சிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காவா பதவியேற்கவுள்ளார்…

சிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காவா பதவியேற்கவுள்ளார்…

சிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காவா 24 ம் திகதி பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே(93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

இதனையடுத்து, நேற்று(22) கூடிய பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில், முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஆளும்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்து, அதன் மீது விவாதம் நடத்தினர். ஆனால், முகாபே தனது பதவியை இராஜினாமா செய்து விட்டதாக கூறிய சபாநாயகர், விவாதத்தை முடித்து வைத்துள்ளார்.

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி முகாபேவால் நீக்கப்பட்ட முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய அதிபராக எதிர்வரும் 24 ம் திகதி பதவியேற்க உள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.