சந்திமாலின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…

சந்திமாலின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டப்பிரிவு ஆணையகத்தின் தவிசாளர், சட்டத்தரணி மைக்கல் பெலொப் தலைமையில் நேற்றைய தினம் மேன்முறையீடு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டபோதே, குறித்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளுடனான முன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தினேஷ் சந்திமால் இழந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்தவுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் மேன்முறையீடு செய்தார்.