அங்கொட மலையில் மண்சரிவு – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு..

வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று காலை முதல் சரிந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும், இதன் காரணமாக மலையடிவாரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கற்களின் சரிவினால் இதுவரை யாருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.