கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தாழமுக்க நிலை தற்போது காங்கேசன்துறையிலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளமையினால் இன்றும் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சுழல் காற்றாக வலுவடையும் சாத்தியகூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சுழல் காற்று இலங்கையை ஊடறுத்து செல்கின்றமையினால் மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் கடும் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நிலைமையின் தாக்கம் மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களையும் பாதிப்பதோடு நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியம் சற்று சீற்றம் அதிகரிக்கும் எனவும், கடற்றொழிலாளர்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.