போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் திருத்த அறிக்கை ஜனாதிபதியிடம்…

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் திருத்த அறிக்கை ஜனாதிபதியிடம்…

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் குறித்த சட்டமூல அறிக்கை இன்று(11) ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.

வாகன சாரதிகளின் தவறுகளுக்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, போக்குவரத்து துறையைச் சேர்ந்த சிலரிடம் இருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு வௌியிடப்பட்டமையால், அது குறித்து ஆராய்ந்து, புதிய அபராத பத்திரத்தை தயாரிக்க, ஜனாதிபதியால் குழுவொன்று அமைக்கப்பட்டது.

நிதி மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள், மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம், வாகனப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் இக் குழுவில் அடங்குகின்றனர்.

 

 

(rizmira)