இலங்கையுடன் எந்த இணக்கப்பாடும் இல்லை – ஜப்பான்..!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த உச்சிமாநாட்டிற்கு இணைத்தலைமை வகிப்பது குறித்து இலங்கையுடன் எந்த இணக்கப்பாட்டையும் எட்டவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.

கடன்மறுசீரமைப்பு

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரங்களில் நேரடி தொடர்பை கொண்டுள்ள ஜப்பான் அதிகாரியொருவர் இதனை ரொய்ட்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பிலிருந்து வியாழக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு முழுமையாக உதவுவதற்கு ஜப்பான் தயார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.