ஊடகங்கள் 4; தேர்தல் முடிவினை வழங்காதிருக்கும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை சில பக்கசார்பான ஊடகங்களுக்கு வழங்குவதை தடுக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இறுதித் தீர்மானம் தொடர்பில் ஆராயப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அதன்படி, சட்ட ஒழுங்கை மீறிய தனியார் ஊடகங்கள் இரண்டு அரச ஊடகங்கள் இரண்டு உள்ளடங்களாக நான்கு பிரதான ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படுவது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்லை கடந்து விட்ட ஊடகங்களுக்கு தனித் தனியாக தேர்தலுக்கு பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.