ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஆராய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது காணப்படும் நிலைமையினை அவதானித்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கட்கிழமை(09) அதிகாலை 05 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று காலை வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை அமுல்படுத்தி நாட்டை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.