லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் இன்று(01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.