எரிபொருள் விலை திருத்தம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(10) மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 13ம் திகதி :
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன(CPC) எரிபொருள் விலைகள்

பெற்றோல் Octane 92 – ரூபா 136 இலிருந்து ரூபா 138 ஆக ரூபா 2 இனாலும்
பெற்றோல் Octane 95 – ரூபா 159 இலிருந்து ரூபா 163 ஆக ரூபா 4 இனாலும்
ஒட்டோ டீசல் – ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 131 இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.