விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.